லக்ஷ்மி தவம் செய்ததால் லக்ஷ்மி வனம் என்ற பெயர் உண்டு. லக்ஷ்மி பிராட்டியை பெருமாள் இத்தலத்தில் திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமாலான கண்ண பரமாத்மா, மங்கையான திருமகளை மணம் புரிந்துக் கொண்டதால் இத்தலம் 'திருக்கண்ணமங்கை' என்னும் பெயர் பெற்றது.
மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் அபிஷேகவல்லி என்று வணங்கப்படுகின்றார். வருணன், உரோமச முனிவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று. திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம், திருக்கோவிலூர் பிற க்ஷேத்திரங்கள்.
நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கையாண்டான் இவ்வூரில்தான் ஆனித் திருவோணத்தன்று அவதாரம் செய்தார்.
திருமங்கையாழ்வார் 14 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|